தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் ஷர்மாவுக்காக எனது விக்கெட்டை எப்போது வேண்டுமானாலும் விட்டுத் தருவேன் – சூர்யகுமார் யாதவ்!
- தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி ரத்து! – அரசு அறிவிப்பால் கட்சிகள் அதிர்ச்சி!
- உலக அளவில் கொரோனா: ஆக்டிவ் கேஸ்கள் 1.44 கோடி!
- தமிழகத்தில் இன்று மேலும் 2184 பேருக்கு கொரோனா உறுதி !
- ஆஸி தொடருக்கு ரோஹித் ஷர்மா செல்லவில்லை… மீண்டும் திடீர் குழப்பம்!
மீண்டும் உயர்ந்த முட்டை விலை… அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் முட்டை விலை சமீபகாலமாக ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது 30 காசுகள் உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக முதலில் பாதிக்கப்பட்டது முட்டை வியாபாரிகள்தான். அந்தளவுக்கு முட்டை விலைக் குறைந்து ஒரு ரூபாய்க்கும் கீழே சென்றது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. இந்நிலையில் சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத வகையில் முட்டை விலை 5.25 காசுக்கு விற்கப்பட்டது. இது இதுவரை இல்லாத விலை ஏற்றமாகும். இன்றும் முட்டையின் கொள்முதல் விலை 5.25 ரூபாய் வரை சென்றது.
அதன் பின் படிப்படியாக குறைந்து தற்போது 4.40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கொள்முதல் விலை 30 காசுகள் உயர்ந்து 4.70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
