திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (09:28 IST)

தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி ரத்து! – அரசு அறிவிப்பால் கட்சிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதை அரசு திரும்ப பெற்றுள்ளது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாதம்தோறும் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கவும், 100 பேர் வரை கலந்து கொள்ளும் அரசியல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், அரசியல் கூட்டங்கள், சமுதாய நிகழ்வுகள், கல்வி மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த அளிக்கப்பட்டுள்ள அனுமதியும் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீண்டும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து அடுத்த மாத தளர்வில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.