1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Surya kumar yadav says he will sacrifice his wicket for rohith for ever

ரோஹித் ஷர்மாவுக்காக எனது விக்கெட்டை எப்போது வேண்டுமானாலும் விட்டுத் தருவேன் – சூர்யகுமார் யாதவ்!

சூர்யகுமார் யாதவ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் ரோஹித் ஷர்மாவுக்காக தனது விக்கெட்டை விட்டுத்தர தயார் எனக் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்தை பீலடரின் கையில் அடித்துவிட்டு ரன் எடுக்க முயற்சித்தார். ஆனால் அவரைக் காப்பாற்ற மறுமுனையில் இருந்த சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை தியாகம் செய்து மறுமுனைக்கு ஓட ஆரம்பித்தார். இதனால் ரோஹித்தின் விக்கெட்டை காப்பாற்றி தனது விக்கெட்டை தியாகம் செய்தார்.

சூர்யகுமாரின் இந்த செயலை பாராட்டும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி அந்த புகைப்படத்தை வெளியிட்டு ‘தன்னலமில்லாத சூர்யா’ எனக் கூற அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் ‘ரோஹித்துக்காக எப்போது வேண்டுமானாலும் எனது விக்கெட்டை தியாகம் செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
ஆஸி தொடருக்கு ரோஹித் ஷர்மா செல்லவில்லை… மீண்டும் திடீர் குழப்பம்!