செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:53 IST)

பள்ளிகளுக்கு கல்வி அலுவலர் எச்சரிக்கை !

தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றின் 3 வது அலை பரவிய நிலையில் இதன் தாக்கல் குறைந்ததால் கடந்த 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு  பள்ளிகள் தொடங்கப்பட்டது.

 இ ந் நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற இருந்த நிலையில்  நிலையில் திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் சமீபத்தில் வினாத்தாள்ககள் கசிந்தது.  இந்த திருப்புதல்  தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தேர்வு தாள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில்  தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஏன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக மெட்டிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.