தொடர்புடைய செய்திகள்
- Odisha train accident: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
- முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் என்பதும் காதில் பூ சுற்றும் வேலை: எடப்பாடி பழனிசாமி
- தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த விடியா ஆட்சி- எடப்பாடி பழனிசாமி
- மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
- புளூடூத் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர் கைது: புதுக்கோட்டையில் பரபரப்பு..!
TNPSC காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!
TNPSC காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக, நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.
இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் , ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
