தொடர்புடைய செய்திகள்
- இருப்பவர் யார் என கொரோனா முடிந்த பிறகு கணக்கு போடலாம்: வைரமுத்து
- முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி - ஓபிஎஸ் அறிவிப்பு!!
- ஓபிஎஸ் கேட்டதை செய்து கொடுத்த ஈபிஎஸ்: வழிகாட்டு குழுவில் யார் யார் தெரியுமா?
- இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ டைம் இல்லை.. ஃபன் பண்ணும் உதயநிதி!!
- ஸ்ஸப்பா டேய் இப்போவே கண்ண கட்டுதுடா... பங்கமாய் கலாய்த்த உதயநிதி!
நம்மில் ஒருவர், நமக்கான தலைவர்! – ட்ரெண்டாகும் எடப்பாடியாரின் புதிய ஸ்லோகன்!
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினருக்கான புதிய வாசகத்தை அதிமுக வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஓபிஎஸ் கோரிக்கையின்படி அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்டு வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நின்றபோது “மக்களால் நான் மக்களுக்காக நான்” என்ற வாசகத்தை அதிமுகவினருக்கான பொது வாசகமாக அளிக்கப்பட்டிருந்தது. அதுபோல தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கான பிரத்யேக வாசகமாக “நம்மில் ஒருவர், நமக்கான தலைவர்” என்ற வாசகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாசகத்தை கொண்ட புகைப்படத்தை அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
