1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (09:37 IST)

ஸ்ஸப்பா டேய் இப்போவே கண்ண கட்டுதுடா... பங்கமாய் கலாய்த்த உதயநிதி!

அமைச்சர் அனைவரும் மாற்றி மாற்றி ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரையும் சந்தித்ததை கலாய்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். 
 
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் இடைக்க உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற பின்னர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகம்  வாழை மரம் கட்டப்பட்டு, வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டு, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
 
விடிய விடிய நடந்த அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை ஈபிஎஸ் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இன்று காலையும் சில அமைச்சர் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்த கூத்துகளும் நடந்தது. 
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புகள் என அமைச்சர் அனைவரும் மாற்றி மாற்றி ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரையும் சந்தித்ததை பட்டியலிட்டு கலாய்த்துள்ளார்.