ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (10:17 IST)

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி - ஓபிஎஸ் அறிவிப்பு!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஓபிஎஸ் அறிவிப்பு. 
 
விடிய விடிய நடந்த அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை ஈபிஎஸ் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கசிந்தது. அதேபோல ஓபிஎஸ், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளிவர வேண்டும் என்று நிபந்தனை விதித்து முதல்வர் வேட்பாளர் ரேசில் இருந்து விலகிக்கொண்டதாகவும் கூறப்பட்டது. 
 
இதன்படியே தற்போது நடந்துள்ளது. ஆம், 2021 ஆம் ஆண்டின் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டார். அதோடு ஓபிஎஸ் கேட்டது போல  அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டது.