1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2021 (17:12 IST)

திமுக அடுத்து ஆட்சிக்கு வரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் திமுக அடுத்து ஆட்சிக்கு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர் 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த வாரம் அவர் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் ஏராளமாக வருகிறது என்பதும் அவரது பேச்சை கேட்க பொது மக்கள் ஆவலுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அடுத்து ஆட்சிக்கு வர உள்ள திமுக நிறைவேற்றக்கூடிய திட்டங்களை வழங்க வேண்டும் என கிணத்துக்கடவு பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடையச் செய்தது
 
’அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் திமுக’ என்று கூறுவதற்கு பதிலாக அடுத்து ஆட்சிக்கு வரும் திமுக எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாற்றி பேசி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது