”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” – அடுத்த கட்டத்தை நோக்கி திமுக!

Prasanth Karthick| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (10:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று அறிவிக்க உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக கிராம சபை கூட்டங்கள் மூலமாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள திமுக திட்டம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் சென்னை கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :