மதுரையில் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு கோவில்! – முதல்வர் திறந்து வைக்கிறார்!

Jayalalitha
Prasanth Karthick| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (14:52 IST)
எதிர்வரும் 27ம் தேதி சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதை தொடர்ந்து மதுரையில் அவருக்கு கோவிலும் திறக்கப்பட உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அதிமுக இடையே கட்சி சார்ந்த பணிகளையும் முடித்து வருகிறது. அந்த வகையில் மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் எதிர்வரும் 27ம் தேதி நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ள அந்த கோவிலை எதிர்வரும் 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :