நீங்கள்தான் முதல்வர்!.. எடப்பாடி பழனிச்சாமியிடம் ஜோதிடர் சொன்னது என்ன?...
ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு தானே முதல்வர் ஆகலாம் என என்கிற கனவில் சசிகலா இருந்தார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவேண்டியிருந்ததால் கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கிவிட்டு அவர் சிறைக்கு சென்றார். ஆனால் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் வராமல் பார்த்துக் கொண்டார். மேலும் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி என இரண்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்..
சசிகலா, டிடிவி தினகரன் மட்டுமல்ல.. ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியில் இருந்து நீக்கினார் பழனிச்சாமி. அதோடு நீக்கப்பட்டவர்கள் இனிமேல் கட்சியின் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக மாறினார். எனவே 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று முதவராக வேண்டும் என்கிற ஆசை எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. ஒரு பக்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிலும் அதிமுக இணைந்திருக்கிறது.
இந்நிலையில், பிரபல வார இதழ் எழுதிய கட்டுரையில் ஒரு முக்கியமான தகவலை குறிப்பிட்டிருக்கிறார்கள்.. திருப்பூரை சேர்ந்த ரிஷியானாந்தா என்பவர்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆஸ்தான ஜோதிடராக இருப்பவர். சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி இவரை சந்தித்து நான் முதல்மைச்சர் ஆவேனா? என கேட்டிருக்கிறார்.
கன்னி ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது புதன் திசை நடக்கிறது.. சூரியனும் வலுடன் பயணிப்பதால் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள்.. கண்டிப்பாக முதல்வராகும் ராஜயோகம் உங்களுக்கு உள்ளது என அவர் சொல்லியிருக்கிறாராம். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி..