1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy announce second stage election compaign

3 கேஸ் சிலிண்டர் இலவசம்!.. அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதி!...

edappadi palanisamy
2011 முதல் 2021 வரை தமிழக சட்டசபை தேர்தலில் இரண்டு முறையும் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதன்பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக கருதுகிறது..

எனவே மக்களுக்கு அதைக் கொடுப்போம்..  இதைக் கொடுப்போம் என அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதியாக ‘ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம்.. பெண்களுக்கு கொடுக்கப்படும் மகளிர் உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும்’ என்றெல்லாம் அறிவித்தார்.. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார் அதன்படி:


முதியோர்கள் உள்ளிட்டோருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 2000 ஆக உயர்த்தப்படும்..

மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு மாநில அரசே கடனை செலுத்தும்..

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும்..

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுக்கப்படும்..

ஜல்லிக்கட்டு போட்டிகளில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி கொடுக்கப்படும்...

மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும்..

இஸ்லாமிய மகளிர் சுய உதவி குழுவினருக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்....
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
குற்ற உணர்ச்சியே இல்ல! விசில்னாலே ஆபத்து.. விஜய் ஆட்டம் குறித்து எழுந்த விமர்சனம்