தொடர்புடைய செய்திகள்
- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்!
- பொங்கல் தொகுப்பு ரூ.1000 எப்போது? முதல்வர் முக்கிய ஆலோசனை!
- இன்று மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்: திமுக கூட்டணியில் இடம்பெறுமா?
- பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு
- அதிமுகவின் கொடிக்கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்
அதிமுக ஆலோசனை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு
அதிமுக ஆலோசனைக் கூட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை ஒரு பக்கம் ஓபிஎஸ் கூட்ட இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
