நாங்க பங்காளிங்க!. அடிச்சிக்குவோம் சேர்ந்துக்குவோம்!.. மோடி மீட்டிங்கில் தெறிக்கவிட்ட டிடிவி!...
சசிகலா குடும்பத்தால் முதல்வரானவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.. ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பின் அதிமுகவின் இமேஜ் மற்றும் தன்னுடைய இமேஜ் பாதிக்கும் என்பதால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் வராமல் பார்த்துக் கொண்டார் பழனிச்சாமி. கட்சியை மற்றும் ஆட்சி இரண்டையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் பழனிச்சாமி.
எனவே, எடப்பாடி பழனிச்சாமி மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார் டிடிவி தினகரன்.. எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி.. அம்மாவின் ஆன்மா கூட அவரை மன்னிக்காது.. எங்களால் முதலமைச்சராகிவிட்டு எங்களையே அவர் சீண்டி பார்க்கிறார்.. அவர் தலைவராக இருக்கும் கூட்டணியில் நான் பங்கு பெற மாட்டேன்.. பழனிச்சாமிக்கு மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார் டிடிவி தினகரன்.
ஒருபக்கம் அமமுக என்கிற கட்சியை துவங்கி தனியாக செயல்பட்டு வந்தார் டிடிவி தினகரன்.. இந்நிலையில்தான் பாஜக எடுத்த முயற்சியில் தற்போது அதிமுக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருக்கிறார்.. இந்நிலையில் தற்போது சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கு பெற்றுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் டிடிவி தினகரன் பேசியதாவது:
தமிழநாடு கொலை, கொள்ளை நாடாக மாறிவிட்டது.. தொடர்ந்து 3 முறை இந்திய பிரதமராக இருந்து நாட்டை உயர்த்தி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி.. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை நடக்கிறது.. தமிழகத்தில் போதை பொருள் பெருகிவிட்டது.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. பிரதமரின் கருத்தை கேட்டு பழனிச்சாமி தலைமையை முழுமையாக ஏற்று கூட்டணியில் சேர்ந்துள்ளோம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்.. பங்காளிகளாக இருந்தவர்கள் நாங்கள்.. எங்களுக்குள் சண்டை இருந்தது உண்மைதான்.. ஆனால் அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு திமுகவை தோற்கடிக்க வேண்டுமென எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் மக்கள் நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என பேசியிருக்கிறார்.