70 சீட், ஒரு துணை முதல்வ, 6 அமைச்சர்கள்.. விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையை முடித்த ராகுல் காந்தி?
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த ஆலோசனையின் முடிவில், காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சர் இடங்களை ஒதுக்க தவெக தரப்பு சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் மக்கள் செல்வாக்கை அறுவடை செய்யவும், ஆட்சியில் அதிகார பகிர்வை உறுதி செய்யவும் இந்த 'டீலிங்' பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இது குறித்து இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால், அது தமிழகத்தின் பாரம்பரிய திராவிட அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Edited by Siva