1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy comment personally cm vijay

பொண்டாட்டி, பிள்ளையோடு வாழ்ந்தாதான் பாசம்!.. விஜய் பேசுவது பச்சை பொய்!.. பழனிச்சாமி கோபம்!..

eps palanisamy
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கே பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுராந்தகம் சென்று பிரச்சாரம் செய்தார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். விரைவில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் இரண்டு தொகுதிகளுக்கும் செல்லவிருக்கிறார்..

இந்நிலையில், இன்று பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘உங்க வீட்டு அண்ணனாக இருப்பேன்.. மாமனாக இருப்பேன் என்று விஜய் பச்சை பொய் பேசுகிறார்.. பாசம் என்று சொன்னால் தாய், தந்தையோடு வாழ வேண்டும், கட்டிய மனைவியோடு வாழ வேண்டும், பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும்,, பாசம் அங்கேதான் பிறக்கும்’ என்று தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கிறார்..

மேலும் சமீபத்தில் மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் முதல்வர் வாய் கிழிய பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலை பிரிப்பதற்குள்ளேயே அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.. ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சி நடக்கிறது.. முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுகிறார்?’ என பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் வெயில் பொளக்கப்போகுது!.. எச்சரிக்கும் வெதர்மேன்!..