1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. delta weatherman hemachandar talk about elnino

தமிழ்நாட்டில் வெயில் பொளக்கப்போகுது!.. எச்சரிக்கும் வெதர்மேன்!..

heat
சமீப காலமாகவே எல் நினோ என்கிற வார்த்தை பரவலாக பல செய்திகளில் அடிபடுகிறது.  பசுபிக் பெருங்கடல் பகுதியில் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் இயற்கையான காலநிலை மாற்றத்தை தான் எல் நினோ என அறிஞர்கள்கள் அழைக்கிறார்கள்.

எல் நினோ காரணமாக உலகளாவிய வானிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. சில பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படுவதோடு பருவமழையும் குறைகிறது. சில இடங்களில் அதிகப்படியான மழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும். இந்தியாவைப் பொறுத்தவரை பருவமழை குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. அதில் வெப்ப நிலை அதிகரித்து வருவதை சூப்பர் எல் நினோ என சொல்கிறார்கள்.

கோடை காலம் முடிந்த பின்னரும் கடந்த மூன்று மாதங்களாகவே தமிழகத்தை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில்தான் சூப்பர் எல் நினோ காரணமாக ஏற்பட்ட வெயிலின் தாக்கம் தமிழ்ழ்நாட்டில் மேலும் 2 -3 வாரங்கள் நீடிக்கும் எனவும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்பதால் அதிக நீர்ச்சத்துடைய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த விஜய்க்கு பிடிஆர் அம்மா ருக்மணி வரவேற்பு.. பூரணகும்ப மரியாதை...