1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy comment about vijay action

விஜய்க்கு கண்ணு தெரியலயோன்னு நினைச்சேன்!.. எடப்பாடி பழனிச்சாமி நக்கல்!..

eps vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் கடந்த 60 வருடங்களாக தமிழ் சினிமாவில் தமிழக அரசியலில் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த அதிமுகவும், திமுகவும் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறது..

திமுக இரண்டாவது இடத்திற்கும், அதிமுக மூன்றாவது இடத்திற்கும் சென்று விட்டது. அதுவும் அதிமுகவால் எதிர்க்கட்சியாக கூட சட்டசபையில் அமர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஒருபக்கம் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

அந்த ஏழு தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘சட்டசபையில் முதல்வர் ஒரு ஆக்சன் செய்தார். அதைப் பார்த்து நான் கூட அவருக்கு கண்ணு தெரியலையோ என்று நினைத்துவிட்டேன்.

அந்த ஆக்சன் மூலம் அவர் அப்பாவைத் தேடினாராம்; அப்பாவைத் தேட வேண்டுமெனில் சட்டசபைக்கு வெளியே போய் தேடுங்கள். அப்பாவைத் தேடுவதற்காகவா உங்களுக்கு வாக்களித்து முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள்? தமிழகச் சட்டமன்றம் எவ்வளவு கேலிக்குரியதாக மாறிவிட்டது’ என அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழக அரசில் என்னதான் நடக்குது?.. ஒன்னும் புரியல!.. அண்ணாமலை பேட்டி!..