1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sivaji krishnamurthy sentenced jail for three years

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 வருட சிறைத்தண்டனை!...

sivaji
தமிழகத்தை பொறுத்தவரை எல்லா அரசியல் கட்சிகளிலும் அந்த கட்சியையும், கட்சி தலைவரையும் புகழ்ந்து பேசுவதற்கென்றே சில பேச்சாளர்களை வைத்திருப்பார்கள். அவர்களில் சிலர் மிகவும் ஆபாசமாக பேசுவார்கள். அதை கட்சி கண்டும் காணாமல் இருப்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவில்தான் அப்படிப்பட்ட பேச்சாளர்கள் அதிகம்.

கலைஞர் கருணாநிதி காலத்தில் வெற்றி கொண்டான் என்கிற பேச்சாளர் அப்படி இருந்தார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் மோசமாக பேசுவார்.. அவரது பேச்சை கேட்டு ரசிப்பதற்கென்று திமுகவின் பெரிய கூட்டமும் இருந்தது.. அடிக்கடி சிறைக்கும் சென்றிருக்கிறார்.

தற்போது முக ஸ்டாலின் காலத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்கிற பேச்சாளர் இருக்கிறார். திமுக மேடைகளில் கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக பேசுவார். மேலும்,  திமுகவை விமர்சிப்பவர்களை மிகவும் மோசமாக விமர்சிப்பார். 2023ம் வருடம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகையும், பாஜக நிர்வாகியுமான் குஷ்புவை மோசமாக பேசினார்.

இதையடுத்து காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.. அதன்பின் தனது பேச்சுகு வருத்தம் தெரிவித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ வெளியிட்டார். இந்நிலையில்தான் ஆளுநரை அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை தண்டனை தித்திருக்கிறது.

மேலும் இந்த வழக்கில் அவருக்கு 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.  அதோடு, மேல்முறையீடு செய்ய அவருக்கு ஒரு மாதம் அவகாசமும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நயினர் நாகேந்திரன் அப்படி பேசமாட்டார்!.. வானதி சீனிவாசன் கருத்து!...