1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamilnadu budget to be presented tomorrow

நெருங்கும் தேர்தல்!. நாளை இடைக்கால பட்ஜெட்!. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?..

mk stalin
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 20ம் தேதி நடந்தது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் தேசிய கீதம் இயக்கப்படவில்லை என சொல்லி கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். அதன்பின் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி முதலமைச்சர். மு க ஸ்டாலின் உரையாற்றினார். அதோடு அந்த கூட்டத்தொடர் முடிந்தது..

இந்நிலையில் 2026- 27க்கான இடைக்கால பட்ஜெட் நாளை காலை 9.30 மணியளவில் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கம் போல காகிதம் இல்லாத பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

பொதுவாக ஒரு நிதியாண்டு முழுமைக்குமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் விரைவில் சட்டசபை தேர்தல் வருவதாலும், மே மாதத்தோடு திமுக அரசு முடிவுக்கு வருவதாலும் இது இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது..
About Writer
Mahendran