1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mdmk asking twelve seats in dmk alliance

12 தொகுதி கொடுக்கணும்!.. அடம்பிடிக்கும் மதிமுக!. திமுகவுக்கு புதிய நெருக்கடி!...

mdmk
பல வருடங்களுக்கு முன்பு திமுகவிலிருந்து பிரிந்து சென்று மதிமுக என்கிற கட்சியை துவங்கியவர்தான் வைகோ. வைகோவை போல கலைஞர் கருணாநிதி கடுமையாக விமர்சித்தவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் மீண்டும் தன்னை திமுகவின் ஆதரவாளராக மாற்றிக் கொண்டார். கடந்த பல தேர்தலாகவே மதிமுக திமுகவுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வருகிறது. கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அதில் 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்..

ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மதிமுக கேட்பதாக தெரிகிறது.. அதோடு அதற்கான தொகுதி பட்டியலையும் கொடுத்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே காங்கிரஸ் 41 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் நிலையில் மதிமுகவும் போர்க்கொடி தூக்கியிருப்பது திமுகவுக்கு புதிய தலைவலியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது..

மதிமுக 12 தொகுதிகளில் கேட்பதற்கு பின்னணியில் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கும் என்பதால்தான் இந்த முடிவை மதிமுக எடுத்திருப்பதாக தெரிகிறது. ஒருவேளை தங்களுக்கு 12 தொகுதிகள் கொடுக்க முடியாது என்றால் 6 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை பதவியை கொடுக்க வேண்டும் எனவும் மதிமுக கேட்டிருக்கிறதாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
அடுத்த கட்டுரையில்
சட்டசபை தேர்தல்: பிரச்சாரத்திற்கு தயாரான எடப்பாடி பழனிச்சாமி!. அதிரடி அறிவிப்பு!...