1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy comment about mk stalin

தோல்வி பயமா?.. 2024. 2025 கோடை காலம் வரவில்லையா?!. பழனிச்சாமி கேள்வி!..

stalin
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை என்கிற பெயரில் திமுக அரசு 1000 ரூபாய் கொடுத்து வருகிறது. இந்த திட்டத்தில் இருக்கும் பெண்களின் வங்கி கணக்குகளில் இன்று காலை 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ‘தேர்தல் வருவதால் அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமை தொகையை முடக்க டெல்லி கூட்டமும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அடிமை கூட்டமும் சதி செய்கிறது.

அதனால்தான் முன்பணமாக மூன்று மாதத்திற்கு சேர்த்து 3 ஆயிரம் மற்றும் கோடைகால சிறப்புத் தொகையாக 2 ஆயிரம் என மொத்தம் 5 ஆயிரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என கூறியிருந்தார். மேலும் திமுக 2.O ஆட்சியில் மகளிர் உரிமை தொகை 2 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ‘தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?. 28 மாதங்களாக 1000 ரூபாய் கொடுக்காமல் இழுத்தடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை கொடுக்கிறாராம்.

செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34 ஆயிரம். ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே ரூ.3,50,000.. இதை அதிமுக அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவதுதானே இந்த அறிவிப்பு?

யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும் நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. அனைத்து குடும்ப அட்டைக்கும் என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்’ என கூறியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று ஒரே நாளில் 20,000 ரூபாய் குறைந்த வெள்ளி விலை.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..