1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind mk stalin announcement five thousand

மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு.. 2 ஆயிரமாக உயர்வு!.. அறிவிப்பின் பின்னணி இதுவா?!...

mk stalin
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் பெற்றுவந்த பெண்களின் வங்கி கணக்குகளில் திடீரென இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போனார்கள். அந்த சந்தோஷம் அடங்குவதற்குள் திமுக 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திறார்.

இது தொடர்பான வீடியோவை இன்று காலை வெளியிட்ட முதல்வர் முக ஸ்டாலின் ‘தேர்தல் வருவதால் பெண்களுக்கு கொடுக்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை தடுக்கவேண்டும் என டெல்லியில் உள்ள கூட்டமும், அவர்களுக்கு துணையாக இருக்கும் அடிமை கூட்டமும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவதாக எனக்கு தகவல் வந்தது..

மேலும் தேர்தல் முடியும்வரை மகளிர் உரிமை தொகை கொடுக்கக் கூடாது என சிலர் நீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மகளிர் தொகை உரிமை கிடைக்காவிட்டால் பெண்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பது எனக்கு புரியும். அதனால்தான் முன்பணமாகவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும் கோடைகால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரமும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாயாக இன்று காலை ஒரு கோடி 31 லட்சம் பெண்கலுக்கு மகளிர் உரிமை தொகை வர வைக்கப்பட்டது’ என்று கூறியிருக்கிறார்.

முதல்வர் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் தேர்தல் நெருங்கி வருவதாலேயே இதை திமுக அரசு கொடுத்திருக்கிறது என அதிமுக மற்றும் பாஜகவினர் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்தில் கோடை காலம் வரவில்லையா? அப்போதெல்லாம் பெண்களுக்கு கொடுக்காத தமிழக திமுக அரசு இப்போது மட்டும் ஏன் கொடுக்கிறது?. இது முழுக்க முழுக்க தேர்தல் அரசியல்தான்.. ஓட்டு போடுவதற்காக மக்களுக்கு கொடுக்கப்படும் நிதியாகவே இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என அவர்கள் பேசி வருகிறார்கள்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
இந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவு வைக்கப்பட்டது.. தேர்தலுக்காக முன்பணமா?