1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edapadi says don’t believe rumours on CAA

"வதந்திகளை நம்ப வேண்டாம்".. முதல்வர் வலியுறுத்தல்

எடப்பாடி
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் சிறுபான்மையினருக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக உள்ளதாக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, ”இஸ்லாமியர்களின் குடியுரிமை இச்சட்டத்தால் பறிக்கப்படும் என வதந்திகளை பரப்பி வருகின்றனர், இது போன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ”இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், என அதிமுகவினர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
ஜார்கண்ட் தேர்தல்; காங்கிரஸ் கூட்டணி முன்னிலை