வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (19:23 IST)

உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாடுகள்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்தல் பிரச்சாரங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதாக இருந்தால் முன்கூட்டியே காவல்துறை அனுமதி பெற வேண்டும். பொது மற்றும் தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது, பிரச்சார படம் வரைவது தடை செய்யப்பட்டுள்ளது.