திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (17:47 IST)

கவரிங் நகையை புதையல் என ஏமாற்றிய கும்பல் – உஷாரான ஹோட்டல்காரர்!

சென்னையில் கவரிங் நகைகளை புதையல் என ஏமாற்றி விற்க முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் சசிகுமார். அவரது கடைக்கு உணவருந்த வந்த பீம் பிரகாஷ் என்பவர் தான் ஒரு பொக்லைன் ஆபரேட்டர் என்று கூறி சசிக்குமாருக்கு அறிமுகம் ஆகியுள்ளார். தான் கர்நாடகாவில் வேலை பார்த்ததாகவும் அங்கே பொக்லைன் மூலம் தோண்டும் போது ஒரு இடத்தில் புதையல் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். தனக்கு யாரையும் தெரியாததால் அதை விற்று தர உதவும்படி சசிக்குமாரிடம் கூறியுள்ளார்.

சசிக்குமாரும் புதையலை எடுத்து வரும்படி கூறியுள்ளார். சில நாட்கள் கழித்து ஹரிஸ் என்பவருடன் வந்த பீம் பிரகாஷ் பழக்கால நகைகள் என கவரிங் நகைகளை சசிக்குமாரிடம் கொடுத்து பணம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த சசி குமார் போலீஸுக்கு தகவல் சொல்லியுள்ளார். உடனே அங்கு விரைந்த போலீஸார் பீம் பிரகாஷையும், ஹரிஸையும் கைது செய்துள்ளனர்.

புதையல் என கூறி கவரிங் நகைகளை விற்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.