புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (11:49 IST)

நாடு முழுவதும் பாரத் டாக்ஸி!.. ஓட்டுனர்களுக்கு ஜீரோ கமிஷன்!.. அமித்ஷா அறிவிப்பு!..

bharath taxi
இந்தியா முழுவதும் உள்ள பெரு நகரங்களில் பெரும்பாலான மக்கள் வாடகை கார் எனும் டாக்ஸி சர்வீஸை பயன்படுத்தி வருகிறார்கள்.. இதை பயன்படுத்தி Ola, Uber போன்ற நிறுவனங்கள் டாக்ஸி மூலம் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கின்றன. அது மட்டுமில்லாமல் அந்த கார்களை ஓட்டும் ஓட்டுநர்களிடமிருந்து 30 முதல் 40 சதவீதம் வரை கமிஷனை வசூலிக்கிறார்கள்..

இதனால் கார் ஓட்டுனர்கள் தங்களின் வாழ்க்கையை ஓட்ட முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது. பல கார் ஓட்டுனர்களும் இது தொடர்பாக புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.. புலம்பி வருகிறார்கள்.. இந்நிலையில், Ola, Uber ஆகியவற்றுக்கு மாற்றாக பாரத் டாக்ஸி என்கிற புதிய செயலியை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

தனியார் நிறுவனங்கள் ஓட்டுனிடமிருந்து 30 முதல் 40 சதவீதம் கமிஷனை வசூலிக்கும் நிலையில் இந்த செயலி ஜீரோ கமிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது ஓட்டுனர்கள் எந்த கமிஷனையும் செலுத்த தேவையில்லை. முதல் கூட்டமாக டெல்லி மற்றும் குஜராத்தில் இந்த சேவைகள் தொடங்கப்படவுள்ளது..

அடுத்த மூன்று வருடங்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் துவாரகா முதல் காமாக்யா வரையும் நாடு முழுவதும் பாரத் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், அந்த தளத்தில் இணையும் ஓட்டுனர்களுக்கு முழு லாபமும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமித்ஷா கூறியிருக்கிறார்.இது நாடெங்கும் உள்ள கார் ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது..