ஞாயிறு, 8 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (12:06 IST)

சிறுமிகள் திடீர் திடீரென காணாமல் போவதாக பெய்டு விளம்பரங்கள்? வதந்தி பரப்புபவர்களின் நோக்கம் என்ன?

சிறுமிகள் திடீர் திடீரென காணாமல் போவதாக பெய்டு விளம்பரங்கள்? வதந்தி பரப்புபவர்களின் நோக்கம் என்ன?
டெல்லியில் சிறுமிகள் காணாமல் போவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து டெல்லி காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
பண ஆதாயத்திற்காக திட்டமிட்டே இத்தகைய பீதி கிளப்பப்படுவதாகவும், இதற்கு பின்னால் கட்டண விளம்பரங்கள் இருப்பதாகவும் காவல்துறை கண்டறிந்துள்ளது. வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என 'எக்ஸ்' தளத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், ஜனவரி 2026-இல் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2026 ஜனவரியில் 1,777 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது நகரத்தின் சராசரி அளவான 2,000-ஐ விட குறைவு. 
 
மேலும், 2016 முதல் இதுவரை 1.80 லட்சத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு குடும்பங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உறுதியளித்துள்ளது. 
 
எனவே, ஆதாரமற்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Siva