தொடர்புடைய செய்திகள்
- மருத்துவர், வழக்கறிஞருடன் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை எப்போது? முக்கிய தகவல்
- அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு
- அமலாக்கத்துறை அலுவலகமா? சித்ரவதை கூடாரமா? வழக்கறிஞர் சரவணன் ஆவேசம்..!
- அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம் என தகவல்..!
பொன்முடி, கௌதம சிகாமணியிடம் 100 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை திட்டம்..!
அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் 100 கேள்விகளை கேட்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று மாலை பொன்முடி, மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில் அவர்களிடம் கேட்க 100 கேள்விகளை அமலாக்கத்துறை தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
செம்மண் குவாரி தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசாரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆம், இல்லை என பதிலளிக்கும் வகையில் கேள்விகளை தயார் செய்து இருவரிடமும் அமலாக்கத்துறை தனித்தனியாகவும் இணைந்தும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணை இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
