1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EC will be dictated cancel rknagr election

ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்காது - ஜெயானந்த் பரபரப்பு கருத்து

RK.Nagar
ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.


 
இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்பு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது. அதிமுகவிற்கு எதிராக திமுக மற்றும் டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர்.
 
அந்நிலையில், அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா தொடந்து நடைபெறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் கூறியுள்ளார். மேலும், இதை தடுக்க வலியுறுத்தி அவர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார். இப்படியே போனால், விரைவில் தேர்தல் ரத்து செய்யப்படும் என செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் “ தேர்தல் ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
டோக்லாம் பகுதியில் மீண்டும் போர் பதற்றம்: 1800 சீன வீரர்கள் குவிப்பு!!