1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja urges to arrest Thirumavalavan under goondas act

திருமாவளவன் மீது குண்டர் சட்டம்?: எச்.ராஜா பரபரப்பு பேட்டி!

திருமாவளவன் மீது குண்டர் சட்டம்?: எச்.ராஜா பரபரப்பு பேட்டி!

திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா புதுவையில் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதமாற்ற கும்பல்களுடன் சேர்ந்து செயல்படுகிறார் எனவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
 
புதுவையில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, சாதி மோதல்கள் வந்தால்தான் மதம்மாற்றம் செய்ய முடியும் என்பதற்காக திருமாவளவன் மதமாற்றும் கும்பலோடு இணைந்து கொண்டு செயல்படுகின்றார்.
 
திருமாவளவன் பேசியதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. அவரால் சிவன் உள்ளிட்ட அனைத்து கோவில்களுக்கும் பாதிப்பு உள்ளது. அவர் வெளியில் இருப்பது ஆபத்தானது. எனவே அவரை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறினார்.
அடுத்த கட்டுரையில்
மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; சத்தீஸ்கர் அரசு அதிரடி