தொடர்புடைய செய்திகள்
- மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி
- கூவத்தூர் கோஷ்டிக்கு விரைவில் ஷாக் அடிக்கும்! – உதயநிதி காட்டம்!
- போன மாசம் 6 ஆயிரம், இந்த மாசம் 50 ஆயிரம்: மின்கட்டணம் குறித்து ‘வலிமை’ நடிகை புலம்பல்
- ரூ.1 லட்சம் மின்கட்டணம்: பிரபல நடிகை டுவிட்டரில் புலம்பல்
- வருமான வரித்தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாட்கள் நீட்டித்து அதாவதும் ஜூலை 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 4 மாத காலத்திற்கான மின்நுகர்வு, 2 மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில், சமமாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மின்நுகர்வு 2 மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி, மின்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதனால் மின்கணக்கீடு செய்யும் போது, தனித்தனியே ஒவ்வொரு 2 மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின்கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
