செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (08:37 IST)

வருமான வரித்தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு

வருமான வரித்தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி வரை மேலும் அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு மூன்று மாதங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமான வரித்தாக்கலுக்கான கடைசித் தேதியை மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. 2018-19ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30ஆம் தேதிக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிப்பிடித்த ரீபண்ட் தொகையை திரும்ப கொடுக்கும் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. அதேபோல பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.