1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EB Bill offer only for 11 districts

11 மாவட்டங்களுக்கு மட்டும் மின்கட்டண சலுகை?! – மின்சாரவாரியம் அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் தொடரும் 11 மாவட்டங்களுக்கு மட்டும் மின்கட்டணம் செலுத்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தளர்வுகள் உள்ள மாவட்டங்களில் மின் கணக்கீடு பணி நடைபெறும் நிலையில் ஊரடங்கு உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் மின் கணக்கீடு நடைபெறவில்லை.

இந்நிலையில் தளர்வுகளற்ற கட்டுப்பாடு உள்ள 11 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை 2019 ஜூன் மாத கட்டணத்தை கணக்கிட்டு செலுத்தலாம் என்றும், அந்த தொகை கூடுதலாக இருப்பதாக கண்டால் 2020 ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
4 கோடி வீடு - சிக்கிடான்ல ஹெச்.ராஜா... வச்சி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்!!