திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (10:08 IST)

3வது அலைக்கு ரூட் போடும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்

டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் தற்போது டெல்டா + வகை வைரஸாக உருமாறியுள்ளது. இதன் தாக்கம் இங்கிலாந்தில் அதிகமாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் டெல்டா+ கொரோனா வகை வைரஸ், இந்தியாவில் 22 பேருக்கு கண்டறியப்பட்டிருக்கிறது.  
 
மேலும் இவ்வகை கொரோனா வைரஸ், உலகளவில் இங்கிலாந்து, அமெரிக்கா, போர்ச்சுகல், சுவிட்ஸலார்ந்து, ஜப்பான், போலாந்து, நேபாளம், சீனா, ரஷ்யா ஆகிய 9 நாடுகளுக்கு பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா, தற்போது 80 நாடுகளில் பரவி உள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில், மத்திய அரசு புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள டெல்டா + வைரஸ் 3வது கொரோனா அலைக்கு காரணமாக இருக்க கூடும் என எச்சரித்துள்ளது. எனவே தற்போது சிறிய அளவில் பாதிப்பு இருக்கும் போதே இப்பிரச்சனையை பெரிதாக விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும், மக்கள் பெருங்கூட்டங்கள், பார்ட்டிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு சொல்லும் நெறிமுறைகளை, ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளது.