மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பா?
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள் என்பதும் அதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மாத இறுதி வரை நீடிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பு விரைந்து அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மின்வாரியம் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்