1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:16 IST)

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை 10 ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஓபிஎஸ் பார்வையிட்ட வில்லை என்றும் ஆனால் இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார் 
 
மேலும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து கேரள அரசும் தமிழ்நாடு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக காணும் சுமூக தீர்வு காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
 
மேலும் பேபி அணையை பலப்படுத்திய பின்பு முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேட்டி