செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:01 IST)

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டுமென முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
 
திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூபாய் ஏழு குறைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
கேரளா புதுவை உள்பட பல மாநிலங்களில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டது என்பதும் தமிழகத்தில் மட்டும் வரி குறைப்பு குறித்த எந்தவிதமான அறிவிப்பும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது