தொடர்புடைய செய்திகள்
- தள்ளிப்போகும் காற்றழுத்த தாழ்வு நிலை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!
- திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்! – அதிமுக தொண்டர்கள் தீவிரம்!
- தமிழகத்தில் 12 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்!
- பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 130 கோடி ரூபாய்க்கு ஆவின் நெய் கொள்முதல்… அமைச்சர் தகவல்!
- பள்ளி சென்ற மாணவி கருகிய நிலையில் சடலமாக மீட்பு! – திண்டுக்கலில் அதிர்ச்சி!
தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்!
உள்நாட்டு விமான பயணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவி அதிகமாக ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அவை பின்வருமாறு...
1. உள்நாட்டு பயணிகள் அனைவர்க்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பதிவு கட்டாயம்
2. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்
3. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம்
4. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.
5. வெளிமாநில விமான பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை
6. கோவை, சென்னைக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்று சான்று வைத்திருக்க வேண்டும்
அடுத்த கட்டுரையில்
