1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:31 IST)

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்! – அதிமுக தொண்டர்கள் தீவிரம்!

தமிழகம் முழுவதும் இன்று திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் நடத்த உள்ளது.

கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தற்போது பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அடிப்படை தேவைகள் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் திமுக அலட்சியம் செய்வதாகவும், வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுகவை எதிர்த்து மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக 12ம் தேதி நடத்த இருந்த போராட்டம் பின்னர் 17ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திமுக அரசை கண்டித்து அதிமுக தமிழக அளவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த உள்ளது. இதற்காக அதிமுக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.