1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mega Vaccination camp for 15th week in Tamil Nadu

15வது மெகா தடுப்பூசி முகாம் - 2வது டோஸ் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை!

Corona Vaccine
நாளை 15 வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

 
தமிழகத்தில் கடந்த 14 வாரங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இதன் மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை 15 வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.
 
இதுவரை தமிழகத்தில் 1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 93 லட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2 வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே நாளை 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்!