1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:04 IST)

தள்ளிப்போகும் காற்றழுத்த தாழ்வு நிலை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

இன்று வங்க கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தள்ளிப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.

கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் 17ம் தேதியான இன்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.