செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (12:46 IST)

இ-பாஸ் முறை மனித உரிமை மீறலாகாதா? தமிழகத்திற்கு நெருக்கடி!

இ-பாஸ் முறை மனித உரிமை மீறலாகாதா என மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 
 
இதையடுத்து இ-பாஸ் இனி, பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, வழக்கமாக வழங்கப்படும் இ பாஸ்களை விட 36 சதவீதம் அதிகமாக பாஸ்கள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. 
 
ஆனால் மத்திய அரசு இ-பாஸ் தேவையில்லை என கூறிய நிலையில் தமிழகத்தில் இ-பாஸ் இன்னும் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது மனித உரிமை மீறலாகாதா? என தமிழக தலைமைச் செயலாளர் 4 வாரங்களில் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.