1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin talk about bjp govt in central

ஒன்றிய அரசு கொடுக்கிற இடத்திலும் நாம வாங்குற இடத்திலும் எவ்வளவு நாள்?.. சட்டசபையில் முக ஸ்டாலின் பேச்சு!...

mk stalin
கலைஞர் கருணாநிதி காலத்தில் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவில் திமுக கூட்டணியில் இருந்தது. அதன்பின் காங்கிரஸ் பக்கம் போய் விட்டது. ஒருபக்கம் கொள்கை ரீதியாகவும் பாஜகவை எதிர்க்கிறது திமுக. பாஜக தொடர்ந்து மத அரசியல் செய்து வருவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலை செய்வதாகவும் திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி ருகிறது. மேலும் பாஜக பாசிச ஆட்சி நடத்துவதாக திமுக தொடர்ந்து பேசி வருகிறது. எனவே திமுகவும், பாஜகவும் எதிரி கட்சிகளாக மாறிவிட்டன..

ஒருபக்கம் கடந்த 11 வருடங்களுக்கும் மேல் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் 2021ம் வருடம் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வரான பின் கடந்த நான்கரை வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. அவ்வப்போது சும்மா கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கிறார்கள்.. இதனால்தான் தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது..

இந்நிலையில்தான், சட்டசபையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் ‘ஒன்றிய அரசிடமிருந்து உரிமைகளை பெற இன்னமும் நாம் போராடும் நிலைதான் இருக்கிறது.. எல்லாவற்றுக்கும் மாநில அரசு ஒன்றிய அரசின் தயவை எதிர்பார்க்கும் நிலை இருக்கிறது.. ஒன்றிய அரசு கொடுக்கும் இடத்திலும் நாம் வாங்கும் இடத்திலும் இன்னும் எத்தனை நாளைக்குதான் இருப்பது’ என பேசியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
19 ஆண்டுகளுக்கு பின் தனித்து போட்டியிட ராகுல் காந்தி முடிவு.. யாருக்கு சாதகமாக அமையும்?