செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (11:18 IST)

1500 ரூபாய் செலுத்தினால் இ பாஸ் கிடைக்கும் – மோசடி பேர்வழிகள் இருவர் கைது!

திருச்சியைச் சேர்ந்த ஈ பாஸ்களை காசுப் பெற்றுக்கொண்டு பெற்று தருவதாக மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல ஈ பாஸ் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அதற்கான சில விதிமுறைகளை அரசு நிர்ணயித்துள்ளது. பொதுமக்கள் இதற்காக பதிவு செய்யும் விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் அதை பயன்படுத்திக் கொண்டு மக்களிடம் காசுப் பிடுங்கி வருகிறது ஒரு கும்பல். பணம் செலுத்தினால் ஈ பாஸ் எடுத்து தருவதாக சொல்லி ஏமாற்றி வருகிறது.

இதுபோல மோசடியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் கொட்டப் பட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வடிவேல்(27), முத்தர சநல்லூர் சிவஞானம் மகன் ஸ்டாலின்(26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்கள் இருவரும் டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளனர். அந்த தொடர்புகளின் மூலம் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட குழக்களின் மூலம் பரப்பியதால் மாட்டிக்கொண்டுள்ளனர்.