ஒரு பக்கம் மகளிர் உரிமைத்தொகை அட்வான்ஸ்.. இன்னொரு பக்கம் கிரிக்கெட் பேட்.. அதிமுக, திமுகவின் தேர்தல் உத்திகள்..!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர்களை கவர தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தங்களது போட்டி போட்டு தங்கள் செயல்பாடுகளை தொடங்கியுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பே காய்களை நகர்த்தும் முயற்சியில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தீவிரமாக உள்ளன.
தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்க தடை ஏற்படலாம் என்பதால், ஸ்டாலின் தலைமையிலான அரசு இரவோடு இரவாக பெண்களின் வங்கி கணக்கில் 5,000 ரூபாயை செலுத்தி அதிரடி காட்டியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதேவேளையில், அ.தி.மு.க தரப்பில் நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்களை கவர 'கிரிக்கெட் பேட்'களையும், பெண்களைக் கவர 'கிச்சன் செட்'களையும் வழங்கி வருகின்றனர். குறிப்பாக, த.வெ.க-வை நோக்கி செல்லும் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க இந்த உத்தியை கையாள்கிறது.
ஆளுங்கட்சியின் நேரடிப்பண விநியோகம் மற்றும் எதிர்க்கட்சியின் பரிசு பொருட்கள் என இருமுனை தாக்குதல்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva