1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Duraimurugan upset with Karnataka

கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது - துரைமுருகன்!

மேகதாது அணை
தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என துரைமுருகன் பேச்சு. 

 
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தது. 
 
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் மேகதாது அணை கட்டப்படும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து துரைமுருகன் பேசியதாவது, 
 
தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது.  மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
யுக்ரேன் மீதான ரஷ்யா போர் - இது வரை நடந்தது என்ன?