முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் போது கேர்டேக்கர் நியமிக்கப்படாதது குறித்து திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கேலி செய்துள்ளார். வெளிநாடுகளில் முதலீடுகளைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராக...