புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (07:00 IST)

திருமாவளவன் முகத்தில் கரன்ஸியை தூக்கி வீசிய லண்டன் தமிழர்கள்: அதிமுக நாளேடு விமர்சனம்

இன அழிப்பை திட்டமிட்டு நடத்திய காங்கிரஸ் மற்றும் அதற்கு துணைபோன திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் திருமாவளவன் முகத்தில் லண்டனில் ஈழத்தமிழர்கள் கரன்சியை தூக்கி வீசியிருப்பதாக அதிமுக நாளே நமது அம்மா விமர்சனம் செய்துள்ளது. அந்த நாளேட்டின் இன்றைய தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கச்சத்தீவை சிங்கள அரசுக்கு சீதனமாக கொடுத்த திமுகவுடன், லட்சோப லட்சம் ஈழத் தமிழர்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசி கொலை செய்து இன அழிப்பையே திட்டமிட்டு நடத்திய இத்தாலி காங்கிரஸ் மற்றும் அதற்கு மத்தளம் வாசிக்கும் திமுகவுடன், இன்றுவரை கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் நாடகம் போடுவதை இலங்கை தமிழர்கள் உணர்ந்துள்ளனர்.
 
இரத்த வெறியன் ராஜபக்சே வீட்டுக்கே சென்று அவர் அவருடன் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு, பரிசும் வாங்கி வந்த பாதகத்தையும் எல்லாம் செய்துவிட்ட வந்த திருமாவளவனை, பணம் தானே உனக்கு வேண்டும் பொறுக்கிக் கொள் என்று பவுண்டுகளை வீசி எறிந்து தலைகுனிய வைத்திருக்கிறார்கள் லண்டன் தமிழகர்கள்
 
இதில் மிகப் பெரிய கேவலம் என்னவென்றால் இங்கிலாந்தில் ஒரு விழாவிற்கு சென்ற அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து ரொம்பவே பொங்கியுள்ளார். மதவாத அரசு பாஜக என்றால் நீங்கள் இனவாதம் பேசும் நபர் என்றும் பணமும் பதவியும் தான் பிரதானம் என்று அலையும் உங்களுக்கு பொது வாழ்க்கை ஒரு கேடா? என்றும் கேள்விகளால் வேள்வி நடத்தி இருக்கிறார்கள் மானம் ரோசம் உள்ள ஈழத்தமிழர்கள்
 
திமுக என்ற தேசவிரோத இயக்கத்தோடு தமிழினத் துரோகிகளோடு நாடகம் கொண்டிருக்கும் கூடா நட்பு தான் இப்படி அவருக்கு கேடாக நிற்கிறது என்றால் திருந்த வேண்டியது அவரது பொறுப்பு என்று அதிமுக நாளேடு குறிப்பிட்டுள்ளது